
புத்ராஜெயா: ஜூலை 25-
இணையப் பகடிவதை விவகாரங்களில் அரசு சகிப்புத்தன்மையை கடைப்பிடிக்காது என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.
இணையப் பகடிவதை தொடர்பான சட்டத்தை மேம்படுத்துவது தொடர்பான அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும்.
தற்போது பிரதமர் துறையின் சட்ட நிறுவன சீர்திருத்தம் அமைச்சு, உள்துறை அமைச்சு, தகவல் தொடர்பு அமைச்சு, இலக்கவியல் அமைச்சு ஆகிய நான்கு அமைச்சுகளும் இந்த விவகாரம் குறித்து மேலும் விவாதித்து வருகின்றன.
இந்த அமைச்சுகளை உள்ளடக்கிய ஒரு குழுவை நாங்கள் அமைத்துள்ளோம். கலந்துரையாடல்களும் ஏற்கெனவே நடந்து வருகிறது.
ஆகையால் விரைவில் அது குறித்த அறிவிப்புகள் வரும் என்று கோபிந்த் சிங் கூறினார்.

