
கோலாலம்பூர்: ஜூலை 25-
அம்னோ, பாஸ் இடையிலான சந்திப்பு உண்மைதான். ஆனால் அரசியல் எதிர்காலம் குறித்து இச் சந்திப்பில் விவாதிக்கப்படவில்லை என்று கெடா மந்திரி புசார் டத்தோஶ்ரீ சனுசி நோர் கூறினார்.
அம்னோ, பாஸ் கட்சியினருக்கு இடையிலான சந்திப்பு தொடர்ந்து பேசு பொருளாக உள்ளது.
சந்திப்பு நடந்தது உண்மைதான். ஆனால் இந்த சந்திப்பில் இரு கட்சிகளின் அரசியல் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்படவில்லை.
குறிப்பாக வரும் 16ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதான ஒத்துழைப்பு குறித்தும் பேசப்படவில்லை என்று அவர் சொன்னார்.

