தமிழ்நாட்டில் சிறப்பு விருதுகளை பெற்ற 10 மலேசிய பெண்களுக்கு சிறப்பிக்கப்பட்டனர்

கோலாலம்பூர், ஜூலை 27-
தமிழ்நாட்டில் பெண்களை அங்கீகரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட விருது நிகழ்ச்சியில் மலேசியாவை சேர்ந்த 10 இந்திய பெண்களுக்கு விருது வழங்கி சிறப்புவிக்கப்பட்டது.

உலக அரங்கில் சாதனை படைத்த நம் நாட்டின் இந்திய பெண்களை கௌரவிக்கும் வகையில் இன்று மஇகா நேதாஜி மண்டத்தில் அவர்களுக்கான சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.

சிறப்பு விருதுகளைப் பெற்ற ஆசிரியர் கர்ப்பகம் கிருஷ்ணசாமி, டாக்டர் ஜசிந்தா ஜெயரத்னம், சன்சித்தா ஆதிமூலம், உமா ஜெராலென் லோய்ஸ், யோகிஸ்வரி ராஜேந்திரன், செல்வமேரி எம்.கிருஷ்ணா, சுபித்ரா ரத்தினம், ஜெகதீஸ்வரி சீத்தாராமன், திலகவதி கார்மேகம், டாக்டர் சோபனா, செல்வமேரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு இன்று நடைபெற்ற சர்வதேச சாதனைப் பெண்கள் பாராட்டு விழாவில் மஇகாவின் துணைத் தலைவர் சொல்வேந்தர், செந்தமிழ் செல்வர் டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் சிறப்பு செய்தார்.

பெண்களுக்கான எடுத்து காட்டாக திகழும் இந்த 10 சிங்கப் பெண்களை பற்றிய காணொளி இந்த நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பப்பட்டதுடன் அவர்கள் கடந்து வந்த பாதையை பற்றியும் இப்பெண்கள் விளக்கினர்.

விருது பெற்ற நம் நாட்டு பெண்களை கௌரவிக்கும் வகையில் எம்எஸ்கே புரொடக்சனை சேர்ந்த செல்வமேரி இந்த பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles