வங்கி பண பட்டுவாடா இயந்திரத்தில் தமிழ் எழுத்து கட்டாயம்!டத்தோ டாக்டர் கலைவாணர் அறிவிப்பு

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் ஜூலை 27-
நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும் பண பட்டுவாடா இயந்திரத்தில் தமிழ் எழுத்து கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள தாய் மொழி பள்ளிகள் அரசியல் அமைப்புக்கு முரணானது அல்ல என்று நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது.

அந்த வகையில் தமிழ் மொழியும் தமிழ்ப் பள்ளிகளும் இந்த நாட்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் வங்கிகள் பண பட்டுவாடா இயந்திரத்தில் தமிழ் எழுத்து கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த முயற்சியை யார் எடுத்தாலும் வரவேற்கிறோம் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் டத்தோ டாக்டர் கலைவாணர் இதனை தெரிவித்தார்.

மலேசிய திராவிடர் கழகம், மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றம் உட்பட தமிழ் அமைப்புகள் இதற்கு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

மேலும் வங்கி பண பட்டுவாடா இயந்திரத்தில் தமிழ் எழுத்து கட்டாயம் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தி கோரி வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி பிற்பகல் 2.00 மணிக்கு மேல் இஸ்தானா நெகராவில் தமிழ் அமைப்புகள் ஒன்று கூடி மகஜர் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles