இணைய பகடிவதைக்கு கடுமையான தண்டனை தேவை! டிக்டோக்கால் இந்திய மாணவர்களின் கல்வி பாதிக்கிறது – ம இகா மகளிர் அணி வேதனை

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் ஜூலை 27-
நாட்டில் இணைய பகடிவதைக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதில் ம இகா தேசிய மகளிர் அணி உறுதியாக உள்ளது என்று அதன் தலைவர் மாண்புமிகு சரஸ்வதி நல்லதம்பி தெரிவித்தார்.

இணைய பகடிவதைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும். அந்த வகையில் ஈஷா எனப்படும் ராஜேஸ்வரி தற்கொலை போல் இன்னோரு சம்பவம் நிகழக்கூடாது.

அந்த வகையில் இணைய பகடிவதைக்கு கடுமையான தண்டனை விதிக்க கோரி மேலவையில் செனட்டர் டத்தோ நெல்சன் வலியுறுத்த கோரி ம இகா மகளிர் அணி மகஜரை வழங்கும் என்று அவர் சொன்னார்.

மேலும் தற்போது நாட்டில் டிக்டோக்கால் இந்திய மாணவர்களின் கல்வி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இது பெரும் வேதனையை அளிக்கிறது என்று இன்று மஇகா மகளிர் அணியின் உச்சமன்ற கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் மாண்புமிகு சரஸ்வதி நல்லதம்பி இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே ம இகா தேசிய மகளிர் அணி சமூக பணிகளை மேற்கொண்டு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

நியமனம் செய்யப்பட்ட மாநில ம இகா மகளிர் அணி பொறுப்பாளர்கள் தத்தம் கடமைகளை சரிவர செய்வார்கள் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles