முடிந்தால் தடுத்து பாருங்கள்! நடிகர் விஷால் சவால்

சென்னை: ஜூலை 28-
“நான் தொடர்ந்து படங்களில் நடிப்பேன்.தயாரிப்பாளர்கள் என சொல்லிக் கொள்பவர்களே… முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள்” என்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடிகர் விஷால் சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது உங்கள் குழுவில் உள்ள கதிரேசனை உள்ளடக்கிய கூட்டு முடிவு என்பதும், அந்த நிதியானது தயாரிப்பாளர் சங்கத்தின் நலிந்த, மூத்த உறுப்பினர்களின் மருத்துவ காப்பீடு, நலப்பணிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கான கல்வி உள்ளிட்ட நலன்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியாதா?

திரையுலகில் நிறைய வேலை உள்ளது. அதில் முறையான கவனத்தை செலுத்துங்கள்.

இரட்டை வரி விதிப்பு, தியேட்டர் பராமரிப்பு கட்டணம் என பல விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டும்.

இதற்கு முன் திரைப்படங்களை தயாரிக்காத, எதிர்காலத்திலும் தயாரிக்காமல் வெறும் ‘தயாரிப்பாளர்கள்’ என சொல்லிக் கொள்பவர்களே… முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள்.

ஆரோக்கியமான விஷயங்களைப் பற்றி யோசியுங்கள்” என சவால் விடுத்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles