
குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்புடன் நேரடி விவாதத்துக்கு தயார் என்று கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார்.
அவர் முன்பு என்னுடனான விவாதத்துக்கு ஒப்புக்கொண்டார். ஆனால் இப்போது பின்வாங்குகிறார்” என்று தெரிவித்தார்.
இது குறித்து டிரம்பின் பிரசார தகவல் தொடர்பு இயக்குனர் ஸ்டீவன் சியுங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஜனநாயக கட்சிக்குள் அரசியல் குழப்பம் நிலவி வருகின்றது.
இதன் காரணமாக அக்கட்சியினர் தங்களது வேட்பாளரை முறையாக முடிவு செய்யும் வரை பொதுத்தேர்தல் விவாதத்தை இறுதி செய்ய முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

