மதுபான, சூதாட்ட நிறுவனங்கள் அறவாரியம் மூலம் நன்கொடை கொடுத்தால் ஏற்றுக் கொள்ளலாம்! ம இகா இளைஞர் அணி தலைவர் அரவிந்த் கூறுகிறார்

மா. பவளச்செல்வன்

கோலாலம்பூர் ஜூலை 28-
மது சிகரெட் மற்றும் சூதாட்ட நிறுவனங்கள் அறவாரியம் மூலம் நன்கொடை கொடுத்தால் ஏற்றுக் கொள்ளலாம் என்று ம இகா தேசிய இளைஞர் அணி தலைவர் அரவிந்த் கிருஷ்ணன் இன்று தெரிவித்தார்.

நேரடியாக நிதி கொடுப்பதற்கு பதிலாக அறவாரியம மூலம் நன்கொடை வழங்கலாம். அதை ம இகா இளைஞர் அணி வரவேற்கின்றது என்று அவர் சொன்னார்.

சீனப் பள்ளிகளுக்கு சூதாட்ட நிறுவனங்கள் நேரடியாக நிதி கொடுத்து வருகிறது.

இதற்கு இப்போது எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.

அந்த வகையில் சூதாட்ட நிறுவனங்கள் அறவாரியம் மூலம் நன்கொடை வழங்கலாம் என்று
இன்று ம இகா தேசிய இளைஞர் அணி உச்சமன்ற கூட்டத்திற்கு பிறகு ஊடகவியலாளரிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

இதனிடையே இணைய பகடிவதைக்கு முற்றுப் புள்ளி வைக்க கடுமையான தண்டனை வதிக்கப்பட வேண்டும் என்பதை ம இகா இளைஞர் அணி வரவேற்கின்றது.

இணைய பகடிவதை குறித்து மேலவையில் குரல் கொடுக்கும்படி செனட்டர் டத்தோ நெல்சனிடம் ம இகா தேசிய மகளிர் அணி மகஜரை வழங்கும் முடிவையும் வரவேற்கிறோம் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles