தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலை சிலம்பம் சீன போட்டியில் இடம் பெற வேண்டும்!

கோலாலம்பூர் ஜூலை 29-
இனி வரும் காலங்களில் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையாக விளங்கும் சிலம்பம்
சீ போட்டியில் இடம் பெற வேண்டும் என்று
மஇகா உதவித் தலைவர் செனட்டர் டத்தோ நெல்சன் கேட்டுக் கொண்டார்.

மலேசிய சிலம்பக் கழகத்தின் 44ஆவது ஆண்டுக் கூட்டம் நேற்று சிறப்பான முறையில் நடைபெற்றது.

இளைஞர் டாக்டர் சுரேஷ் தலைமையில் இச்சங்கம் துடிப்புடன் செயல்பட்டு வருகிறது.
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சுக்மா போட்டிக்கு மலேசிய சிலம்பக் கழகம் தயாராகி வருகிறது.

சுக்மாவுடன் அது நின்று போகாமல் சீ, ஆசிய, ஒலிம்பிக் போட்டிகளிலும் சுக்மா இடம் பெற வேண்டும்.
அதற்கான ஒத்துழைப்பு மஇகா தொடர்ந்து வழங்கும் என்று டத்தோ நெல்சன் கூறினார்.

இதனிடையே அடுத்த மாதம் சரவா கூச்சிங் நடைபெறும் சுக்மா போட்டியில் சிலம்பம் இடம் பெற்றுள்ளது.

இது சிலம்ப கலைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம் என்று மலேசிய சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் எம் சுரேஸ் தெரிவித்தார்.

14 மாநிலங்களைச் சேர்ந்த சிலம்ப விளையாட்டாளர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

மொத்தம் 14 தங்கம் 14 வெள்ளி 28 வெண்கலப் பதக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles