
புத்ராஜெயா, ஜூலை 29- இம்மாதம் 14 முதல் 20 வரையிலான 29வது தொற்றுநோயியல் வாரத்தில் மொத்தம் 317 புதிய டிங்கி சம்பவங்கள் பதிவாகின. இக்காலக்கட்டத்தில் இந்நோயினால் நால்வர் உயிரிழந்தனர்.
கடந்த 28வது நோய்த் தொற்று வாரத்தில் 2,373ஆக இருந்த டிங்கி நோயாளிகளின் எண்ணிக்கை 29வது வாரத்தில் 2,690 பேராக உயர்வை கண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 பேராக அதிகரித்தது என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமது ராட்ஸி அபு ஹாசன் கூறினார்.

