
புத்ராஜெயா, ஜூலை 29- பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) நாடுகளுக்கிடையிலான அமைப்பில் இணைவதற்கான விண்ணப்பக் கடிதத்தை அதன் நடப்புத் தலைவரான ரஷ்யாவுக்கு மலேசியா அனுப்பியுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மலேசியாவுக்கு வருகை புரிந்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்வுடன் பிரதமர் அன்வார் ஸ்ரீ பெர்டானாவில் நடத்திய கலந்துரையாடலில் முக்கிய அம்சமாக பிரிக்ஸ் அமைப்பில் சேர்வது தொடர்பான மலேசியாவின் விருப்பம் இருந்தது என்று பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் அறிவித்தது.
பிரிக்ஸ் அமைப்பில் சேர்வதற்கான விண்ணப்பக் கடிதத்தை மலேசியா அந்த அமைப்பின் தலைவராக உள்ள ரஷ்யாவிற்கு மலேசியா அனுப்பியுள்ளது. அதன் உறுப்பு நாடாக அல்லது விவேகப் பங்காளியாக சேர்வதற்கான விருப்பத்தையும் அது வெளிப்படுத்தியது என்று அந்த அறிக்கை கூறியது
.
பிரிக்ஸ் அமைப்பில் சேரும் மலேசியாவின் விருப்பத்தை பிரதமர் அன்வார் கடந்த ஜூன் 18ஆம் தேதி பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் தெரியப்படுத்தினார்.

