சிலாங்கூர் மாநில mysel மூலம் குடியுரிமை கிடைத்த 30 பேர் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்!

காளிதாஸ் சுப்ரமணியம்

ஷா ஆலம், ஜூலை 29-
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் மைசெல் மூலம் இன்று முப்பது பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பப்பா ராயுடு பொறுப்பேற்றுள்ள ஆட்சிக் குழுவின் கீழ் மைசெல் இயங்குகிறது.

சிலாங்கூர் மாநிலத்தில் குடியுரிமை இல்லாதவர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தரும் வகையில் மைசெல் இயங்கி வருகிறது.

அந்த வகையில் இன்று 30 பேருக்கு குடியுரிமை க்கான உறுதி கடிதம் வழங்கப்பட்டது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடியுரிமைக்கான கடிதத்தை பெற்றுக் கொண்டனர்.

இதில் பத்து பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷா ஆலம் எஸ்யூகே foyer மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வுக்கு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி தலைமையேற்றார்.

மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி மற்றும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு ஆகியோர் நேரடியாக குடியுரிமை க்கான சான்றிதழ் உறுதி கடிதத்தை 30 பேருக்கு வழங்கினர்.

குடியுரிமைக்கான உறுதி கடிதத்தை பெற்றுக் கொண்ட அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

மைசெல் அதிகாரிகளாக திருமதி சாந்தா மற்றும் ரகுபதி சிறப்பான முறையில் சேவையாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles