

காளிதாஸ் சுப்ரமணியம்
ஷா ஆலம் ஜூலை 29-
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தலைமையில் இயங்கும் மைசெல் மூலம் இன்று முப்பது பேருக்கு குடியுரிமை க்கான உறுதி கடிதம் வழங்கப்பட்டது.
இந்த உறுதி கடிதத்தை தேசிய பதிவு இலாகாவில் சமர்ப்பித்து ஒரு மாதத்திற்குள் அவர்கள் அடையாளக் கார்ட்டை பெற்று கொள்வார்கள்.
இன்றைய தேதியில் இருந்து இந்த பேரும் மலேசிய பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.இன்று குடியுரிமை பெற்ற 30 பேரில் பத்து பேர் இந்தியர்கள் ஆவர்.
செராஸ் டாமாய் பெர்டானா இடைநிலைப் பள்ளியில் ஐந்தாம் படிவம் பயிலும் மாணவி சரண்யா மணியம் இன்று குடியுரிமைக்காக உறுதி கடிதம் கிடைத்ததால் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதாக குறிப்பிட்டார் .
குடியுரிமை இல்லாததால் என்னை பலர் கேலி கிண்டல் செய்தனர்.நான் இந்த நாட்டுப் பிரஜை இல்லை என்றும் பலர் கேலி செய்ததை என்னால் மறக்க முடியாது.
ஆனால் இன்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு மூலம் எனக்கு குடியுரிமை கிடைத்தது ஒரு மகிழ்ச்சி தருகிறது என்றார் அவர்.
எஸ்பிஎம் தேர்வை உற்சாகத்தோடு எழுதுவேன் என்றார் அவர்.

