

ஷா ஆலம் ஜூலை 29-
பிறப்பு பத்திரம் மற்றும் குடியுரிமை பெற்று தருவதாக கூறும் கும்பலிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில மைசெல் மூலம் இதுவரை 2,297 பேருக்கு குடியுரிமை பெற்று தந்துள்ளோம். மொத்தம் 6,208 விண்ணப்பம் கிடைத்தாலும் முழுமையான பரிசீலனைக்கு பின்னர் தேசிய பதிவு இலாகா 2,297 விண்ணப்பங்களை பரிசீலித்து அங்கீகரித்துள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் குடியுரிமை அல்லது பிறப்பு பத்திரம் பிரச்சனையை எதிர்நோக்கி இருப்பவர்கள் நேரடியாக மைசெல் உதவியை நாடும் படி அவர் கேட்டுக் கொண்டார்.

