
புத்ராஜெயா, ஜூலை 31- சபா உள்ளிட்ட உரிமை கோரல் விவகாரத்தில் அரசாங்கம் ஒருபோதும் சமரசப் போக்கை கடைபிடிக்காது என்பதோடு நாட்டின் இறையாண்மையை ஒரு அங்குலம் கூட விடாமல் தற்காக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சூளுரைத்துள்ளார்.
சபா மீதான பிலிப்பைன்ஸ் நாட்டின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் தனது உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. நமது மக்களின் ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதோடு நமது உரிமை மற்றும் இறையாண்மை தொடர்பில் எந்த பேச்சு வார்த்தையிலும் ஈடுபட மாட்டோம் என அவர் சொன்னார்.
சபா மீது பிலிப்பைன்ஸ் கோரிக்கை வைத்துள்ள போதிலும் மலேசியாவுக்கும் அந் நாட்டிற்கும் இடையிலான அரச தந்திர உறவுகள் சிறப்பாக உள்ளதோடு தமக்கும் அதிபர் பெரடின ண்ட் மார்க்கோஸ் ஜேஆருக்கும் இடையிலான உறவு மிகவும் நெருக்கமானதாகவும் அணுக்கமானதாகவும் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

