
திருவனந்தபுரம்: “வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளானது, கேரளா இதுவரை கண்டிராத மிகப் பெரிய இயற்கை பேரழிவு. இதுவரை 93 உடல்களை மீட்டுள்ளோம். இந்த எண்ணிக்கை அதிகமாகலாம்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுவரை 93 உடல்களை மீட்டுள்ளோம். 128 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சில உடல்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டபோது கண்டெடுக்கப்பட்டது.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம். மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 3,069 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 5 அமைச்சர்கள் ஒருங்கிணைந்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளைக் கண்காணித்து வருகின்றனர்.

