தமிழ்ப்பள்ளிகள் மலேசிய இந்தியர்களின் இதயத்துடிப்பு! டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறுகிறார்

சித்திய வான், ஜூலை 31-
இந்த நாட்டில் உள்ள தமிழ் பள்ளிகள் இந்தியர்களின் இதயத்துடிப்பாக விளங்குகிறது என்று மக்கள் சக்தி கட்சி தலைவர் டத்தோஸ்ரீ ஆர் எஸ் தனேந்திரன் கூறுகிறார்.

பேராக் சித்தியவானில் உள்ள வால்புரோக் தோட்ட தமிழ் பள்ளியின் விளையாட்டுப் போட்டியை திறந்து வைத்த போது அவர் இதனை தெரிவித்தார்

இந்த ஆண்டு 36ஆவது விளையாட்டுப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு பள்ளி நிர்வாகம் மற்றும் PIBG இடையேயான ஒத்துழைப்பைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த வகையான ஒத்துழைப்பின் மூலம், கல்வி மற்றும் இணை பாடத்திட்டத்தில் சிறந்து விளங்க முடியும்.

மேலும் இந்த ஒத்துழைப்பு வரும் ஆண்டிலும் மாணவர்களின் நலனுக்காக தொடரும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று அவர் சொன்னார்.

பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இருக்கும் மணிவண்ணன் மக்கள் சக்தி கட்சியின் தேசிய உதவித் தலைவர்.

இந்த போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றது மகிழ்ச்சியை தருகிறது என்றார் அவர்.

பேராக் மாநில மக்கள் சக்தி கட்சியின் உதவி தலைவர் இந்திரன், தொழில் முனைவர் மகேஸ்வரன் உட்பட பலரும் இந்த போட்டி விளையாட்டு கண்டு மகிழ்ந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles