7 அம்சங்கள் கொண்ட தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டார்
கிள்ளான் சுயேட்சை வேட்பாளர் தீபக்

கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் ஏழு முனை போட்டி நிலவுகிறது.

இதில் மோதிரம் சின்னத்தில் பிரபல தொழிலதிபர் தீபக் போட்டியிடுகிறார்.

அரசியல் ஊழல்வாதிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர் கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால் தொகுதி மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்றுவேன் என்றார்.

கிள்ளான் தொகுதியில் உள்ள மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் மற்றும் வசதி குறைந்த மக்களுக்கு போதுமான உதவிகள் கிடைக்க பாடுபடுவேன்.

நேரடியாக களத்தில் இறங்கி மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றுக்கு நல்ல முறையில் தீர்வு காண்பேன் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles