
கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பண்டார் புத்தியில் முன்பெல்லாம் ஆண்டுக்கு ஒரு முறை வெள்ளம் ஏற்படும்.
வெள்ளம் ஏறியதும் குறுகிய நேரத்தில் வடிந்து விடும்.
ஆனால் இப்போது ஒரு மணி நேரம் அடைமழை பெய்தால் கூட பண்டார் புத்ரியில் இரண்டு அடி உயரத்திற்கு வெள்ளம் ஏறிவிடும்.
இப்போது எங்களுக்கு வெள்ளம் ஒரு மிரட்டலாக இருக்கிறது என்று பண்டார் புத்ரி குடியிருப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பால் முருகன் பிள்ளை தெரிவித்தார்.
கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெறும் நாடாளுமன்ற உறுப்பினர் எங்கள் பிரச்சனைக்கு நல்ல முறையில் தீர்வு காண வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

