
பேராக் பாசிர் சாலாக் நாடாளுமன்ற தொகுதியை அம்னோவிடம் இருந்து பக்கத்தான் ஹரப்பான் கைப்பற்றி சாதனைப் படைக்கும் என பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் நிக் அஜிஸ் புதல்வர் Nik Omar சூளுரைத்தார்.
கிளாந்தான் மாநில முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ நிக் அஜிஸ் புதல்வர் நிக் ஓமார் ஆவார்.
இம்முறை கெஅடிலான் கட்சி சார்பில் பாசிர் சாலாக் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
சர்ச்சைக்குரிய தாஜூடீன் அப்துல் ரஹ்மான் இம்முறை போட்டியிட அம்னோ வாய்ப்பு வழங்கவில்லை.
அவருக்கு பதிலாக தேசிய முன்னணி சார்பில்
Khairul Azwan Harun போட்டியிடுகிறார்.
பேராக் மாநிலத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அலை வீசுகிறது
. அந்த வகையில் பாசிர் சாலாக் நாடாளுமன்ற தொகுதியை பக்கத்தான் ஹரப்பான் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

