
நாட்டை முறையாக நிர்வகிப்பதில் தோல்வி கண்ட அமைச்சர்களையும் தலைவர்களை நிராகரிக்கும்படி வாக்காளர்களை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
தங்கள் எதிர்காலத்தையும் நாட்டின் நிலைத்தன்மையையும் பொதுமக்கள் தீர்மானிக்கக்கூடிய களமாக இந்த பொதுத் தேர்தல் விளங்குகிறது..
அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மட்டுமின்றி எதிர்காலத்திற்கும் தங்களின் தலைவிதியை நிர்ணயிப்பதற்கு சரியான முடிவை இத்தேர்தலில் எடுக்கும்படி பொதுக்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இப்போது முட்டைகள் கூட கிடைப்பது இல்லை என்று அவர் சாடினார்..

