தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்தால்
ஸ்ரீ மூடா மக்களை ஆட்டிப் படைக்கும்
வெள்ளப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!

நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தால் ஷா ஆலம் ஸ்ரீ மூடா மக்களை ஆட்டிப் படைக்கும் வெள்ளப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இளம் வேட்பாளர் கஜேந்திரன் வாக்குறுதி அளித்தார்

இப்போது பெய்து வரும் அடை மழையால் ஷா ஆலம் ஸ்ரீ மூடா வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

இந்த வெள்ள பிரச்சினைக்கு கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சாபு தீர்வு காண தவறிவிட்டார்.

ஷா ஆலம் ஸ்ரீ மூடாவில் ஏறும் வெள்ளத்தை வெளியேற்றும் தேசிய முன்னணி திட்டத்தை 2018 இல் ஆட்சிக்கு வந்த பக்கத்தான் ஹரப்பான் அரசு ரத்து செய்தது.

ஷா ஆலம் ஸ்ரீ மூடா வெள்ளப் பிரச்சனைக்கு தேசிய முன்னணி அரசால் மட்டுமே தீர்வு காண முடியும்.

ஆகவே கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள் தேசிய முன்னணியை வெற்றி பெற செய்யும் படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles