
பேராக் மாநிலத்தில் உள்ள ஈப்போ அரங்கில் நடைபெற்ற சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி கிண்ணப் போட்டியில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் மலேசிய குழு கிண்ணத்தை வென்று சாதனை படைத்தது.
நேற்றிரவு நடைபெற்ற பரபரப்பான இறுதி ஆட்டத்தில் மலேசியா 3-2 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த தென் கொரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
பயிற்சியாளர் அருள் செல்வராஜ் தலைமையிலான மலேசியா ஹாக்கி குழு அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


