
பேராக் மாநிலத்தில் உள்ள ஆயேர் கூனிங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மலேசிய சோசலிசக் கட்சியின் வேட்பாளர் கே எஸ் பவாணி நேற்று தனது 5 அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
உள்ளூர் மக்களுக்காக 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தேர்தல் களத்தில் இறங்கியிருக்கும் பவாணி, அங்குள்ள மக்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளைக் கண்டறிந்த பின்னரே இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிட்டதாக கூறினார்.
ஆயேர் கூனிங்கில் பிறந்து வளர்ந்த கே. எஸ். பவாணி ஒரு வழக்கறிஞருமாவார்
பிறந்தது முதல் அங்கேயே வாழ்ந்து வருவதால், அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தனக்கு நன்றாகப் புரியம்.
ஆயர் கூனிங்கில் தரமான சாலை வசதிகள், பொது பேருந்து, ஏடிஎம் இயந்திரங்கள் பொருத்துதல், முழுநேர மருத்துவ சேவை மற்றும் தொலைதொடர்பு வசதிகளை மேம்படுத்தல் போன்ற ஐந்து அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவர் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

