
வரும் 19 தேதி நடை பெறும் வாக்களிப்பு தினத்தில் இந்திய சமுதாயம் அலையென திரண்டு வந்து வாக்களித்து அடுத்த தலை முறை நிமிர்ந்து தன்மானத்துடன் வாழ வழி வகுப்பீர் என்று இந்திய சமுதாயத்திற்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதி ராவ் அழைப்பு விடுத்துள்ளார்..
கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் கணபதி ராவ். கடந்த காலத்தில் இந்திய சமுதாயம் இழந்த உரிமைகளை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்றார்.
இந்த தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களுக்கும் பிளவு படாத ஆதரவை இந்திய சமுதாயல் கொடுக்க வேண்டும்.
மலாக்கா மற்றும் ஜொகூர் மாநிலத் தேர்தல்களில் இந்தியர்கள் திரண்டு வந்து வாக்களிக்க வரவில்லை.
இந்தியர்கள் வராததால் இரு மாநிலங்களில் வெற்றியை பறி கொடுத்தோம்.
15 வது பொதுத் தேர்தலில் அனைவரும் அலை கடலென திரண்டு வந்து 2008 ஆம் ஆண்டு ஹிண்ட்ராப் கொண்டு வந்த பேரலையை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
இந்த தேர்தலிலும் அந்த மகத்தான சாதனை நாம் மீண்டும் படைக்க வேண்டும் என்று ஹிண்ட்ராப்பின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த வழக்கறிஞர் கணபதி ராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

