புத்ரா ஜெயா, ஆக 1
கல்வி அமைச்சின் புதிய சிறப்பு அதிகாரியாக பாலமுரளி கோவிந்தராஜ் இன்று நியமனம் செய்யப்பட்டார்.
பாங்கி வட்டாரத்தைச் சேர்ந்த பாலமுரளி பாங்கி கெஅடிலான் தொகுதி தலைவராக பதவி வகிக்கிறார்.
சிறந்த சேவையாளராக விளங்கும் அவர் கெஅடிலான் கட்சியின் அடிமட்ட தொண்டர் ஆவார்.
பக்கத்தான் ஹராப்பான் மற்றும் கெஅடிலான் கட்சியின் வெற்றிக்கு கடுமையாக உழைத்த தொண்டர்களில் இவரும் ஒருவராவார்.
காஜாங் நகராமை கழக உறுப்பினராக இருக்கும் இவர் இன்று முதல் கல்வி அமைச்சின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.