
கோலாலம்பூர், ஆக 2-
கல்வி அமைச்சின் புதிய சிறப்பு அதிகாரியாக பாலமுரளி கோவிந்தராஜ் நியமனம் செய்யப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியும் உச்சகத்தையும் தருகிறது என்று சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் இடைக்கால தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
பாங்கி- காஜாங் வட்டாரத்தைச் சேர்ந்த பாலமுரளி சிறந்த சமூக சேவையாளராகவும் இளம் அரசியல்வாதியாகவும் விளங்குகிறார்.
கல்வி அமைச்சின் சிறப்பு அதிகாரி பொறுப்புக்கு இவர் மிகவும் தகுதியானவர் என்பதில் ஐயமில்லை.
இந்நாட்டில் தமிழ் பள்ளிகள் எதிர்நோக்கி இருக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கல்வி அமைச்சும் அரசாங்கமும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சகோதரர் பாலமுரளி தமிழ் பள்ளிகள் பிரச்சனைகள் குறித்து துணிகரமாக கல்வி அமைச்சின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
நாட்டில் 26 தமிழ் பள்ளிகள் பத்துக்கும் குறைவான மாணவர்களை கொண்டிருக்கிறது
இந்தப் பணிகளை இடம் மாற்றம் செய்யும் பணிக்கு அவர் முன்னுரிமை வழங்க வேண்டும்.
இது தவிர்த்து 150க்கும் குறைந்த மாணவர்களை கொண்டிருக்கும் தமிழ் பள்ளிகளை இந்தியர்கள் அதிகம் வசிக்கும் இடங்களுக்கு இடம் மாற்றம் செய்யவும் இவர் திட்டங்களை வகுக்க வேண்டும்.
இந்தப் பணிகள் மிகக் கடினமானவை என்றாலும் கல்வி அமைச்சு மற்றும் அரசாங்கத்திடம் முறையாக மகஜர்களை சமர்ப்பித்து அதற்கு விடிவுகாலம் பிறக்க பாலமுரளி போராட வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவராக விளங்கும் அவருடன் இணைந்து பணியாற்ற நாங்களும் தயாராக இருக்கிறோம் என்று உலுலங்காட் மைபிபிபி தொகுதி தலைவருமான டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.

