
பலாக்கோங், ஆக.2-
நீரிழிவு நோயினால் அவதியுற்று வரும் சிவலெட்சுமி த/பெ வேலாயுதம் என்பவருக்கு பலாக்கோங்
சட்டமன்ற உறுப்பினர் ஓங் சுன் வெய் சக்கர நாற்காலி மற்றும் மருத்துவ பொருட்களை வழங்கினார்.
இங்குள்ள தாமான் செராஸ் பிரிமாவைச் சேர்ந்த சிவலெட்சுமி பல ஆண்டுகளாக நீரிழிவு நோயினால் அவதியுற்று வருகிறார்.
தற்போது நடக்க முடியாத நிலையில் இருக்கும் இவருக்கு இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஓங் சுன் வெய் சக்கர நாற்காலி, சர்க்கரை அளவு சோதனை கருவி, மாத்திரைகள் மற்றும் மெல்லிய காகிதம் (பெம்பர்ஸ்) ஆகியவற்றை வழங்கினார்.
இன்று இவரின் வீட்டிற்கு நேரில் வருகை புரிந்த ஓங் சுன் வெய் இவற்றை சிவலெட்சுமியிடம் நேரில் ஒப்படைத்ததோடு இவரின் உடல் நலம் குறித்தும் விசாரித்தார்.
தனது தேவைகளை அறிந்து உரிய நேரத்தில் தனக்கு உதவி புரிந்த சட்டமன்ற உறுப்பினர் ஓங்கிற்கு சிவலெட்சுமி நன்றி தெரிவித்துக் கொண்டார் .
இச்சந்திப்பில் பலாக்கோங் இந்திய சமூக தலைவர் கிறிஸ்டி மற்றும் கவுன்சிலர் எட்வின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

