
நாட்டில் உள்ள இந்தியர் முடித்திருத்தும் நிலையங்கள் இன்னமும் அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றன
கடைகளில் வேலை செய்ய அந்நிய தொழிலாளர்கள் இல்லை என்பதால் அதன் உரிமையாளர் கள் பெரும் பிரச்சனையை எதிர் நோக்கி இருப்பவர்கள்.
ஆகவே நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் புதிய அரசாங்கம் எங்கள் பிரச்சனைக்கு நல்ல முறையில் தீர்வு காண வேண்டும் என்று மலேசிய இந்தியர் முடித்திருத்தும் சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ டாக்டர் மகேந்திரன் வெள்ளைச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

