இளைஞர்களின் வேலை வாய்ப்பு பிரச்சனைக்கு தீர்வு காண டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் தீவிர முயற்சி

உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் தனது தொகுதியில் உள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்பு பிரச்சனைக்கு தீர்வு காண தீவிரமாக களத்தில் இறங்கி உள்ளார்.

இளைஞர்களுக்கு சரியான வாய்ப்பு, பயிற்சியும், வழிகாட்டுதலும் வழங்கப்பட வேண்டும்.

“உலு சிலாங்கூரில் 5,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன, ஆனால் அவைகளில் பெரும்பாலும் வெளிநாட்டினர் வேலை செய்கிறார்கள்.

மலேசிய இளைஞர்கள் சோம்பேறிகள் என்ற சாக்குப்போக்கு கூறப்பட்டாலும் நமது இளைஞர்களுக்கு தகுதியான வேலைகள் வழங்கப்பட வில்லை என்றார் அவர்.

“சரியான வழிகாட்டுதல், சரியான பயிற்சி கொடுக்கப்பட்டால், நம் இளைஞர்கள் சோம்பேறிகள் என்று சாட வேண்டிய அவசியம் இருக்காது .

ஆகவே உலு சிலாங்கூரில் வெற்றி பெற்றதும் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுப்பேன் என்று அவர் சொன்னார்.

இறைவனின் அருளால் மக்களின் ஆதரவோடு உலு சிலாங்கூரில் மீண்டும் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles