
சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் கைரி ஜமாலுடின் இதுவரை சுங்கை பூலோ மக்களுக்கு என்ன செய்திருக்கிறார் என்று பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் டத்தோ ரமணன் கேள்வியை எழுப்பியுள்ளார்.
நான் இந்த தொகுதியில் இருந்து மக்களுக்கு சேவை ஆற்றி வருகிறேன்.
ஆனால் கைரி இங்குள்ள மக்களுக்காக என்னதான் செய்திருக்கிறார்.
கைரியின் இனிப்பான வாக்குறுதிகளை சுங்கை பூலோ மக்கள் நம்ப மாட்டார்கள் என்று அவர் சொன்னார்.
இதனிடையே நேற்று சுங்கை பூலோவில் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டபோது உடனடியாக டத்தோ ரமணன் களத்தில் இறங்கி உதவினார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி மீண்டும் பக்கத்தான் ஹரப்பான் கோட்டை என்பதை நிரூபிப்போம் என்று அவர் சொன்னார்.

