
அரசியல் தவளைகளின்” கால்களைக் கட்டிப்போடும் தாவல் எதிர்ப்புச் சட்டம், வாக்காளர்களுக்கு மற்றொரு ஷெரட்டன் நகர்வை ஏற்படுத்தாது என்று மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் டத்தோ அம்பிகா ஸ்ரீநீவாசன் உறுதியளித்தார்.
ஷெரட்டன் நகர்வு 2020 இல் பக்காத்தான் ஹராப்பான் கூட்டாட்சி அரசாங்கத்தைக் கவிழ்த்தது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியை நம்பிக்கை துரோகிகள் கவிழ்த்தார்கள்.
இப்போது கட்சி தாவல் சட்டத்தின் மூலம் தவளைகள் கால்கள் கட்டிப் போடப்பட்டுள்ளன.
இந்நேரத்தில் நீங்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
அக்கறையின்மையை, சோம்பலை மறந்து, எதுவும் மாறாது என்ற இந்த உணர்வையையும் மறந்துவிடுங்கள்.
“இந்தத் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க எடுக்கும் ஒவ்வொரு அடியும் மாற்றத்தை ஏற்படுத்தும் மற்றும் மாற்றத்தைக் கொண்டு வரும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று பிரபல போராளியாக வலம் வரும் டத்தோ அம்பிகா சீனிவாசன் தெரிவித்தார்.

