சுங்கை பூலோ மக்களுக்கு
ரமணன் செய்த சேவைகள் தான் என்ன?
சத்யா சுதாகரன் கேள்வி

சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் நாட்டு மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி இருக்கிறார்.

இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் முதல் இன்று சுகாதார அமைச்சர் வரை கைரி ஜமாலுடின் சேவையை நாடும் மக்களும் அறிவார்கள்.

கோவிட் 19 நோய்த் தொற்றின் போது மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த கொடிய நோயில் இருந்து மக்களை காப்பாற்ற விரைந்து தடுப்பூசிகள் போடப்பட்டன.

இதில் கைரி ஜமாலுடின் பங்கு அளப்பரியது. இதற்கு முன்னர் ரெம்பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்று மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி இருக்கிறார்.

ஆகவே சுங்கை பூலோ மக்களுக்கு கைரி என்ன செய்தார் என்பதை விட அவர் நாட்டு மக்களுக்கு நல்லதை செய்திருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும்.

சுங்கை பூலோ மக்களுக்கு இதுவரை ரமணன் என்ன செய்தார் என்று நாங்களும் கேள்வியை கேட்க முடியும்.

தேர்தல் வெற்றி பெற்றால் தொகுதி மக்களுக்கு என்ன திட்டங்களை கொண்டு வரலாம் என்பதை பற்றி பிரச்சாரம் செய்ய வேண்டும் தவிர தனிப்பட்ட முறையில் தாக்குதல் கூடாது என்று மைபிபி கட்சியின் முன்னாள் தேசிய இளைஞர் பகுதி தலைவர் சத்யா சுதாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கைரி ஜமாலுடின் ஒரு சிறந்த சேவையாளர். மக்கள் அவரை நேசிக்கிறார்கள். போட்டி கடுமையாக இருந்தாலும் கைரி தன்னகடத்துடன பிரச்சாரம் செய்து வருகிறார் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles