
தனக்கு வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என்ற வேறுபாடின்றி தொகுதியிலுள்ள அனைத்து மக்களுக்கும் தாம் சேவையாற்றப் போவதாக பூச்சோங் தொகுதி பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் இயோ பீ யின் உறுதி அளித்துள்ளார்.
இத்தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் எந்த பாகுபாடும் இன்றி பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தொழில் நிபுணத்துவத்தை தாம் வெளிப்படுத்தப் போவதாக அவர் சொன்னார்.

தேர்தலில் வெற்றி பெற்றால் வாக்காளர்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.
நான் ஒருபோதும் ஒரு சார்பு நிலைப்பாட்டை எடுக்க மாட்டேன்.
நீங்கள் எனக்கு வாக்களித்தீர்களா? இல்லையா? என்பது முக்கியமல்ல. அனைவரையும் நாம் அரவணைத்துச் செல்ல வேண்டும். அவர்கள் மனதில் நீண்டகாலத்திற்கு இடம் பிடிக்க வேண்டும் என்றார் அவர்.

