தோட்டப் பாட்டாளியின் மகனான யுனேஸ்வரனுக்கு சிகாமாட்டில் அலை வீசுகிறது

கெஅடிலான் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினரான 35 வயதுடைய யூனிஸ் வரன் ஜொகூர் சிகாமாட் நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடுகிறார்.

இளஞ்சிங்கம் என்று வர்ணிக்கப்படும் இவர் 10 ஆண்டுகளாக சிகாமாட் தொகுதி மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்.

ஒவ்வொரு முறையும் கடுமையான மழை பெய்யும் போது அந்தத் தொகுதியின் பல்வேறு இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படுகிறது.

இது ஒரு நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வருகிற போதிலும் முறையானதொரு தீர்வு காண்பதற்கு ஆக்ககரமான நடவடிக்கை எதனையும் அரசாங்கம் மேற்கொள்ளாததால் மக்கள் படும் அவதியைக் காண்பதற்கு மிகவும் வருத்தமாக உள்ளது என்கிறார் ஒரு தோட்டப் பாட்டாளியின் மகனான யுனேஸ்வரன்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles