இந்த இடம் சட்டவிரோதமானது என்றால் எதற்காக ஹன்னா இயோ இங்கு வந்தார்! கராத்தே மாஸ்டர் தென்னவன் கேள்வி

கோலாலம்பூர் ஆக 9-
சிகாம்பூட் தாமான் ஸ்ரீ சினாரில் ரூக்குன் தெத்தாங்காவில் இயங்கும் கராத்தே பயிற்சி மையம் சட்டவிரோதமானது என்றால் எதற்காக இங்கு நடந்த பல நிகழ்ச்சிகளில் இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ கலந்து கொண்டார் என்று மாஸ்டர் தென்னவன் கேள்வியை எழுப்பினார்.

இங்கு நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டிருக்கிறார்.குறிப்பாக தைப்பொங்கல் விழா, கிறிஸ்துமஸ் விழா உட்பட பல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இந்த இடம் சட்ட விரோதமானது என்பது அவருக்கு தெரியாதா?

30 ஆண்டுகள் மேலாக இந்த கராத்தே பயிற்சி மையம் இயங்கி வருகிறது. ஆனால் இன்று திடீரென இந்த பயிற்சி முகாம் கட்டடம் சட்டவிரோதமானது என்று அவர் கூறுகிறார்.

அவர் இங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அந்த நிகழ்ச்சி நாங்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்தோம்அவரிடம் இருந்து நாங்கள் சல்லி காசு கூட மானியம் வாங்கியதில்லை.

அப்போதெல்லாம் இந்த இடம் சட்டவிரோதமானது என்று அவருக்கு தோன்றவில்லையா!இன்று திடீரென்று சட்ட விரோதமான இடம் கட்டடம் என்று கூறுபவர் பின்னர் எதற்காக இந்த இடத்திற்கு வந்தார் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாஸ்டர் தென்னவன் கேள்வியை முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விடத்தை காலி செய்யவதற்கு 1 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.நாங்கள் அடுத்தடுத்து சுக்மா உட்பட பல போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளோம். ஆகையால் எங்களுக்கு இந்த கால அவகாசம் போதாது. மேலும் இந்த விவகாரத்தில் ஹன்னா இயோ தலையிட்டு உரிய தீர்வை பெற்று தர வேண்டும்.

குறிப்பாக எங்களுக்கு பயிற்சி பெற ஒரு இடத்தை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நடுரோட்டில்தான் நாங்கள் பயிற்சிகளை மேற்கொள்வோம் என்று தென்னவன் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles