
பலாக்கோங், ஆக. 12-
இங்குள்ள நாகேஸ்வரி ஆலய திருவிழாவில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்
வீ. பாப்பாராய்டு சிறப்பு வருகை புரிந்தார்.
இத்திருவிழாவில் பாப்பாராய்டுவுடன் பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வெய்ன் ஓங் சுன் வெய்யும் கலந்து கொண்டார்.
இவ்விருவருக்கும் ஆலய நிர்வாகத்தினர் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து சிறப்பு செய்தனர் .
அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்ற இத்திருவிழாவில் சுற்றுவட்டார மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர் .

