குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் செந்தூல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் ஆடி கடைசி வெள்ளி சிறப்பு பூஜை!

கோலாலம்பூர் ஆக 13-
நிகழும் மங்களகரமான குரோதி ஆண்டு ஆடி மாதம் 31 ஆம் தேதி ( ஆங்கிலம் 16-8-2024) துவாதசி திதியும் பூராடம் நட்சத்திரமும் வரலட்சுமி விரதமும் கூடிய ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு செந்தூல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் 108 சங்க அபிஷேகமும் சண்முகார்ச்சனையும் மிகவும் விமர்சியாக நடைபெறுகிறது.

பிற்பகல் 2 மணிக்கு சங்காபிஷேகம், 3.00 மணிக்கு அபிஷேகம், 5.30 மணிக்கு நித்திய பூஜையும் நடைபெறும்.

மாலை 6:00 மணிக்கு சண்முகார்ச்சனையும் தீபாராதனையும் நடைபெறும்.

அதன் பின்னர் பக்தர்களுக்கு சுவையான அன்னதானம் பரிமாறப்படும்.

அன்பர்கள் யாவரும் வருகை தந்து இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொள்ளும்படி குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் அன்போடு கேட்டுக் கொள்கிறார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles