சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்: தேனி காவல் துறை நடவடிக்கை

தேனி: யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சவுக்கு சங்கர் தேனி பூதிப்புரம் சாலையில் உள்ள விடுதியில் கடந்த மே 4-ம் தேதி தங்கியிருந்தார். அப்போது கோயம்புத்தூர் போலீஸார் அவரை கைது செய்தனர்.

அவரது கார் மற்றும் விடுதி அறையை சோதனை செய்த போது கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பழனிசெட்டிபட்டி போலீஸார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருந்த இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இதுகுறித்த வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles