ஷா ஆலம்-அக் 14,
வங்களாதேசத்தில் அமைதியும் மதநல்லிணக்கமும் மீண்டும் வரவேண்டும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் ச.பிரகாஷ் வலியுறுத்தினார்.
அன்மையில் வங்காளதேசத்தில் ஏற்ப்பட்ட மக்கள் புரட்சியில் அந்நாட்டின் அமைதியும், மதநல்லிணகமும் தச்சமயம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அனைவரும் அறிந்த செய்தியே, அதேவேளை அந்நாட்டில் வசிக்கும் சிறுபான்மையினரின் மதத்தை காரணம் காட்டி வன்முறைகள் கட்டவிழ்க்கப்படுவது என்பதும் வருத்தம் அளிக்கும் தகவலாகவே தொடர்ந்து வந்துக் கொண்டிருப்பதையும் அவர் சுட்டிகாட்டினார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவ்வன்முறையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்,மக்கள் முன்பு போல் அமைதியாகவும் மத நல்லிணக்கத்துடனும் இருக்க வேண்டும் என்று தாம் இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் கூறினார்.
சிறுபான்மையினரின் உரிமைகள்,சொத்துக்கள் பாதுகாக்கபட வேண்டும் என்பது உலக சட்டமாகும்.
இது வங்களாதேசத்திற்க்கும் பொருந்தும் என்றும் அதை தச்சமயம் இருக்கும் தற்காலிக அரசாங்கம் நிலை நிறுத்த முன்வர வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
வன்முறையை யார் கையில் எடுத்தாலும் அது குற்றமே,ஆக அங்கே தலைவிரித்தாடும் வன்முறையை அடக்கவும் இந்துக்கள் மற்றும் சிறுபான்மை இனத்தவர்களின் மதங்களும் தொடர்ந்து பாதுகாக்க அந்நாட்டு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.