
சென்னை: ஆக 18- ‘பொன்னியின் செல்வன் -1’ படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்திய அளவில் அதிக முறை தேசிய விருது வென்ற இசையமைப்பாளர்களில் முதலிடம் பிடித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
70ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான இந்த விருதுகளில், சிறந்த தமிழ் திரைப்படமாக மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் 1’ தேர்வாகியுள்ளது.
மேலும் இப்படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

