
ஜெலாபாங், ஆக.18- ஜெலாபாங்கில் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் தற்போது குறிப்பிடத்தக்க இந்து வழிபாட்டு மையமாகவும் சமூக சேவை மையமாகவும் செயல்படுகிறது.
பத்து காஜா மற்றும் தம்புன் நாடாளுமன்றங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த ஆலயம் உள்ளூர் சமூகத்தை ஒன்றிணைப்பதிலும் பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் கூறினார்.
அண்மையில் இக்கோவிலுக்கு வருகை தந்து, கோவில் நிர்வாகத்தால் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
இந்த வருகையின் போது, ஆலயம் ஏற்பாடு செய்துள்ள சமூக நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஆதரவாக 10,000 ரிங்கிட்டை நன்கொடையாக அவர் வழங்கினார்.
ஒரு சமூகத்தின் முன்னேற்றம் உள்கட்டமைப்பில் மட்டுமல்ல, ஒற்றுமையை வளர்க்கும் சமூக நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்க்க பட வேண்டும். ஒரு வழிபாட்டு தலமும் சமூக ஒற்றுமையின் மையமாக செயல்படுகிறது என்பதற்கு இந்த கோவில் ஒரு எடுத்துக்காட்டு” என்று கோடிக்காட்டினார்.
இந்த கோவில் நல மேம்பாட்டிற்கு இந்திய சமூகம் மற்றும் தம்புன் பகுதி உட்பட பிற சமூகங்களுக்கு உதவ பத்து காஜா நாடாளுமன்ற மக்கள் சேவை மையம் உறுதிபூண்டுள்ளது.
இந்த நன்கொடை பல இனங்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் எங்கள் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். சமூகத்தில் ஒவ்வொரு முறை நடத்தப்படும் நிகழ்ச்சிகளிலிருந்து பலன்களைப் பெறுவதை உறுதிசெய்வோம் என்று அவர் கருத்துரைத்தார்.
ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் இப்போது ஜெலபாங் மக்களின் கவனத்தை மட்டுமல்ல, தம்புன் பாராளுமன்றத்திலிருந்து மக்களின் கவனத்தையும் ஈர்க்கிறது.
பத்து காஜா நாடாளுமன்றத்திற்கும் தம்புன் நாடாளுமன்றத்திற்கும் இடையில் அதன் ஒற்றுமையான நிலைப்பாடு இரு பகுதிகளிலிருந்தும் இந்திய சமூகத்தின் சந்திப்பு நடவடிக்கைகளுக்கான முக்கிய இடமாக அமைகிறது. பிரதமரின் தலைமையிலான தம்புன் நாடாளுமன்றம், கோவிலுக்கு தனது ஆதரவை வழங்கியது. இரு நாடாளுமன்றங்களிலும் இந்திய சமூகத்தின் சந்திப்பு புள்ளியாக கோயில் முக்கிய பங்கை வகிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கோயிலின் தனித்துவமான கட்டிடக்கலை சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. உள்ளூர் பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறது மற்றும் இந்திய சமூகத்தின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கிறது என்று அவர் கூறினார்.
பத்துகஜா நாடாளுமன்ற தொகுதியின் மக்கள் சேவை மையம் மற்றும் ஆலயக் குழுவின் தொடர்ச்சியான பங்களிப்பும் ஒத்துழைப்பும் இவ்வட்டாரத்தில் பல்லின சமூகத்தின் நல்வாழ்வையும் நல்லிணக்கத்தையும் உறுதி செய்வதில் மடானி அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. சமூக மேம்பாடு மற்றும் தேசிய ஒற்றுமையில் மத நிறுவனங்கள் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்க முடியும் என்பதையும் இந்த முயற்சி காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

