
மா. பவளச்செல்வன்
கோலாலம்பூர் ஆக 17-
அடுத்த பொது தேர்தலில் என்ன மரியாதை கிடைக்கிறது என்பதை வைத்துதான் மஇகா அதிரடி முடிவுகளை எடுக்கும்.
குறிப்பாக இங்கு அடிமையாக இருப்பதை விட அங்கு வீர மரணம் அடையலாம் என்று ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் இன்று முழங்கினார்.
விலாயா மாநில மஇகாவின் 78ஆவது பேராளர் மாநாடு இன்று நேதாஜி மண்டபத்தில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக மாநிலத்தில் இந்திய சமுதாய மக்களின் பிரச்சினைக்கு யாருமே குரல் கொடுப்பது இல்லை என குறைகள் முன் வைக்கப்பட்டது.

நாம் ஏதையாவது செய்ய நினைத்தால் அதைக் கெடுப்பதற்கு நாலு பேர் தயாராக இருப்பார்கள்.
நம்மையும் செய்ய விட மாட்டார்கள்.
இருந்தாலும் சமுதாய பிரச்சனைக்கு மஇகா தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று அவர் சொன்னார்.
மைக்கா ஹோல்டிங்ஸ், மித்ரா, 2,000 ஏக்கர் நிலம் என ஒரு சிலர் மஇகாவை தொடர்ந்து குற்றம் சாட்டி வருவார்கள்.
அப்படி பேசுபவர்களுக்கு அதன் வரலாறு குறித்து தெரியாது. ஏன், மைக்கா ஹோல்டிங்சின் இயக்குநர்கள் யார் என்றுக் கூட அவர்களுக்கு தெரியாது.
இது போன்ற விவகாரத்தை விளக்கம் அளிக்கும் வகையில் தான் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
விரைவில் அந்த புத்தகம் வெளிவரும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

நான் எழுதும் புத்தகம் ஒரு பக்கம் இருந்தாலும் மஇகாவின் அனைத்து தலைவர்களும் உறுப்பினர்களும் இந்த வரலாறுகள் குறித்து உண்மை அறிந்து பேச வேண்டும்.
நமக்கு எதிராக குற்றம் சாட்டுபவர்களின் வாய்களை அடைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அடுத்த பொது தேர்தலில் மரியாதை, அங்கீகாரத்தை வைத்தே மஇகா முடிவுகள் எடுக்கும்.
இங்கு அடிமையாக இருப்பதை விட அங்கு வீர மரணம் அடையலாம். அதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்

