
சியோல், ஆக,19-
தென் கொரியாவில் நடைபெற்ற பனிச்சறுக்கு போட்டியில் கலந்து கொண்ட மலேசியாவின் இளம் வீராங்கனை அபிராமி சந்திரன் முதல் இடத்தை பிடித்து வாகை சூடினார்.
பல நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்ட வேளையில் பிரிவு 3 இல் போட்டிட்ட அபிராமி சந்திரன் முதல் இடத்தை பிடித்தார்.
கடந்த ஆண்டு இதே பிரிவில் வெற்றி பெற்ற இவர் இம்முறையும் வெற்றி பெற்றுள்ளது பெரும் சாதனையாகும்.
மேலும் ஐந்து மாநகராட்சி போட்டியிலும் இவர் பங்கேற்று வாகை சூடி நாட்டிற்கும் இந்திய சமுதாயத்துக்கும் பெருமை தேடி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

