பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை வரவேற்றார் இந்திய பிரதமர் மோடி!

புதுடில்லி ஆக 20-
மூன்று நாள் அதிகரிப்பூர்வ பயணம் மேற்கொண்டு மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்திய சென்றுள்ளார்.

அதிகாரப்பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் டத்தோஸ்ரீ அன்வாருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.

காலை 9 மணியளவில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்த டத்தோஸ்ரீ அன்வாரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ உட்பட தன்னுடன் வந்த அமைச்சர்களை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்திய பிரதமர் மோடிக்கு அறிமுகப்படுத்தினார்.

முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

1948ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி அடக்கம் செய்யப்பட்ட மகாத்மா காந்தியின் நினைவிடமான காந்தி நினைவிடத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles