பேங்க் நெகாராவின் அனைத்துலகக் கையிருப்பு 115.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்வு!

கோலாலம்பூர்: ஆக 23-
பேங்க் நெகாரா மலேசியாவின் (பிஎன்எம்) அனைத்துலகக் கையிருப்பு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நிலவரப்படி 115.9 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை 114.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
கையிருப்பு நிலை பொருட்கள், சேவைகளின் இறக்குமதிக்கு 5.4 மாதங்களுக்கு நிதியளிக்க போதுமானது.

இது மொத்த குறுகிய கால வெளிநாட்டு கடனை விட 1.0 மடங்கு அதிகம் என்று பிஎன்எம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கையிருப்பின் முக்கிய கூறுகள் வெளிநாட்டு நாணய கையிருப்பு 103.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

அதைத் தொடர்ந்து அனைத்துலக நாணய நிதிய கையிருப்பு (US$1.3 பில்லியன்), சிறப்பு வரைதல் உரிமைகள் (SDRs) (US$ 5.7 பில்லியன்), தங்கம் (US$2.9 பில்லியன்) மற்றும் பிற இருப்பு சொத்துக்கள் (US$2.3 பில்லியன்) ஆகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles