துணை வாக்காளர் பட்டியல் பரிசீலனைக்கு திறக்கப்பட்டுள்ளது! உங்கள் விவரங்களை சரி பார்க்கலாம்….

புத்ராஜெயா, ஆகஸ்ட் 23-
வருடாந்திர ஜூலை மாதத்திற்கான வாக்காளர் பட்டியல் (DPT BLN7/2024), சரிபார்க்கப்பட்டு இன்று அரச பதிவேட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 19 வரை 30 நாட்களுக்கு பரிசீலனைக்கு திறந்திருக்கும் இப்பட்டியலில் பொது மக்கள் தங்கள் விவரங்களை சரி பார்க்கலாம் என்று தேர்தல் ஆணையத்தின் (EC) செயலாளர் டத்தோ இக்மல்ருடின் இஷாக் தெரிவித்தார்.

புதிய வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்ட 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்களின் 38,952 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அடையாள அட்டை படி இவர்கள் ஜூலை 1 முதல் 31 வரை இயற்கையாக பதிவு பெற்ற வாக்காளர்களாகும்.

“தங்கள் பெயர்கள் DPT BLN7/2024 இல் பட்டியலிடப்படவில்லை எனில், அவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தின் மூலமாகவோ அல்லது மாநில தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று படிவம் C ஐப் பூர்த்தி செய்வதன் மூலமாகவோ பதிவுக்கு உரிமை கோரலாம்.

“எந்த ஒரு தொகுதியிலும் வசிக்கும் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்ட இடத்தை விட்டு வேறு தொகுதிகளுக்கு மாறியிருந்தாலும், அந் நுழைவுக்கு ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால், D படிவத்தை நிரப்பலாம் .

அல்லது மாநில தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்,” என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles