
புத்ரா ஜெயா: ஆக 24-
மாமன்னரை சிறுமைப்படுத்தியதாக பெர்சத்து கட்சி தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் மீதான விசாரணையில் தமக்குத் தொடர்பில்லை என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்துள்ளார்.
அவர் மீதான விசாரணையைக் காவல்துறை, சட்டத்துறை தலைவர் ஆகியோரிடம் விட்டு விடுவதாக பிரதமர் கூறினார்.
அவர் மீது தேச நிந்தனை சட்டத்தின் கீழ் விசாரிப்பதை சில தரப்புகள் எதிர்ப்பதாகக் கூறப்பட்டது.
முன்னதாக, நெங்கிரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தாம் பத்தாவது பிரதமராக நியமிக்கப்படுவதற்கு போதிய ஆதரவு இருந்தது .
ஆனால் அப்போதைய பேரரசர், அல் சுல்தான் அப்துல்லா தம்மை பிரதமராக நியமிக்கவில்லை என்று பேசும் காணொலிகள் வைரலானது தொடர்பில் அவருக்கு எதிராக விசாரணை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
பெர்னாமா

