நீரில் புதையுண்ட விஜயலெட்சுமியை தேடும் பணி தீவிரம்!

கோலாலம்பூர்: ஆக 24-
கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவிலுள்ள மலாயான் மன்ஷன் எதிரே ஏற்பட்ட நீர் அமிழ்வில் சிக்கிக் கொண்ட இந்தியச் சுற்றுப் பயணி விஜயலெட்சுமியை மீட்கும் நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

தற்போது தேடுதல் பணி தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

தீயணைப்பு மீட்புத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் காலை 9 மணிக்கு மீண்டும் தேடுதல் மற்றும் மீட்புப் பணியைத் தொடர்ந்தனர்.

ஆனால் காலை 11 மணி வரை பாதிக்கப்பட்ட பெண் குழிக்குள் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

மீட்புக்குழுவினர் நிலத்தடி வடிகால் வழியாக தங்கள் தேடலை மேலும் விரிவுபடுத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள குறைந்தது 10 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles