சிலாங்கூர் மாநில அரசின் 50 லட்சம் வெள்ளி மானியத்திற்கு முறையாக விண்ணப்பம் செய்யுங்கள்! 99 தமிழ்ப் பள்ளிகளுக்கு டாக்டர் சுரேந்திரன் வேண்டுகோள்

ஷா ஆலம், ஆக 26-
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 99 தமிழ்ப் பள்ளிகளுக்கு சிலாங்கூர் மாநில அரசு இவ்வாண்டும் 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கி இருப்பது பாராட்டுக்குரியது என்று சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் இடைக்கால தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.

இந்த
50 லட்சம் வெள்ளி மானியத்திற்கு முறையாக விண்ணப்பம் செய்யும்படி ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு 99 தமிழ்ப் பள்ளிகளையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதிக்குள் 99 தமிழ்ப் பள்ளிகளும் இந்த மானியத்துக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று சிலாங்கூர் மாநில அறிவித்துள்ளது.

கடந்த 2008 சிலாங்கூர் மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் வழங்கி வருகிறது.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் தமிழ்ப் பள்ளிகளுக்கு 50 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 99 தமிழ்ப் பள்ளிகளும் இதற்கு முறையாக விண்ணப்பம் செய்து மானியத்தை பெற்றுக் கொள்வதை உறுதி வேண்டும் என்று டாக்டர் சுரேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படும் இந்த மானியத்தில் 70 விழுக்காடு பள்ளி அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்கும்
மீதமுள்ள 30 விழுக்காடு மானியம் மாணவர்களின் கல்வி திட்டங்களுக்கும் பயன் படுத்த வேண்டும் என்று சிலாங்கூர் அரசு அறிவித்துள்ளது பெரிதும் வரவேற்கிறோம்.

இந்த மானியம் மூலம் தமிழ்ப்பள்ளிகள் தங்களது திட்டங்களை முறையாக மேற்கொள்ள வழி வகுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழ் பள்ளிகளுக்கான மானியம் அதிகரிக்க சிலாங்கூர் மாநில அரசு முன் வர வேண்டும் என அவர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார் 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles